மலேசியாவில் கடந்த 2014 ஆம் வருடத்தில் மாயமான விமானம் குறித்து அதிகரமான தகவலை பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2014 ஆம் வருடத்தில் மார்ச் மாதம் MH 370 என்ற மலேசிய விமானம் சுமார் 239 நபர்களுடன் சென்ற போது மாயமானது. இதுகுறித்த அதிர்ச்சிகரமான செய்தி புலனாய்வு பத்திரிகையாளர் புளோரன்ஸ் என்பவரால் தெரியவந்துள்ளது. அதாவது இந்த விமானமானது மலேசியாவில் உள்ள கோலாம்பூர் என்ற பகுதியில் இருந்து புறப்பட்டு சீனாவில் உள்ள பீஜிங் நகருக்கு செல்ல இருந்தது. அச்சமயத்தில் ஒரு மணி நேரத்திற்கு முன்பாக விமானம் தடம் புரண்டதால் இந்திய பெருங்கடலில் மூழ்கியது என்று அரசு தகவல் வெளியிட்டிருந்தது.
ஆனால் பத்திரிகையாளர் புரோன்ஸ்ஸ், தாய்லாந்து வளைகுடாவில் விழுவதற்கு முன் சுமார் 80 நிமிடங்கள் வரை விமானம் பறந்ததை குறிப்பிட்டார். மேலும் அவர் வியட்நாமிற்கு அருகில் உள்ள தாய்லாந்து வளைகுடா பகுதியில் ஏவுகணை அல்லது ஏதேனும் புதிய வகையிலான ஆயுதம் ஒன்றால் இந்த விமானம் தாக்கபட்டிருக்கலாம் என்று தான் கருதுவதாக கூறியுள்ளார். மேலும் இச்சம்பவம் திட்டமிடபட்ட சதியாகவோ அல்லது விபத்தாகவோ இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது என்றார்.
மேலும் குறிப்பிட்ட விமானமானது சட்டத்தை மீறி சில சரக்குகளை கொண்டு சென்றுள்ளது. இது மலேசிய அரசினால் வெளியில் தெரியாமல் மறைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். மேலும் வியட்நாமின் விமான நிலையத்தில் தரை இறங்க வேண்டும் என்று விமானம் அனுமதி கேட்டதாகவும் நாங்கள் ஆபத்தில் சிக்கிக் கொண்டதாக அவசர சமிக்கைகள் அனுப்பியிருந்ததை குறிப்பிட்டுள்ளார். மேலும் நான் தெரிவித்த அனைத்து தகவல்களும் உண்மையாக இருக்கும் பட்சத்தில், வரலாற்றிலேயே சமீபமாக மறைக்கப்பட்ட மிகப்பெரிய உண்மை இது தான் என்று தெரிவித்துள்ள புளோரன்ஸ் பல பதக்கங்களை பெற்றுள்ள பிரான்சின் பத்திரிகையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.