வடகொரியா மலேசியாவுக்கு இடையே உள்ள தூதரக உறவுகள் முற்றிலும் அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வட கொரியாவை சேர்ந்தவர் முன் சோல் மியாங். இவர் மலேசியாவின் முன்னணி நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் அமெரிக்கா மியாங் மீது பண மோசடி செய்ததாகவும், சட்டவிரோதமாக ஆவணங்களை வழங்கியதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. இதனால் மலேசியா காவல்துறை அவரை கடந்த 2019ஆம் ஆண்டு கைது செய்துள்ளது. இதனையடுத்து அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று மலேசிய உச்ச நீதிமன்றம் மியாங்கை தங்களிடம் ஒப்படைக்க இருப்பதாக தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வடகொரியா தூதரகம் “மலேசியா மன்னிக்க முடியாத தவறை செய்ததாகவும், மோசமாக நடந்து கொண்டதாகவும் கூறி இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உறவுகளை முற்றிலும் அழிக்க இருப்பதாக” தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இதற்கு முக்கிய காரணமாக இருந்த அமெரிக்கா நிச்சயமாக இதற்கு தகுந்த பதிலளிக்க வேண்டும் என்று வடகொரியா அரசு எச்சரிக்கை கொடுத்துள்ளது.