Categories
உலக செய்திகள்

மலேசியா: 14,692 பேருக்கு கொரோனா பாதிப்பு….. வெளியான தகவல்…..!!!!!

மலேசியாவில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு நிலவரத்தின் அடிப்படையில் புதிதாக 14,692 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை 42,34,087 ஆக அதிகரித்துள்ளது. மலேசியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் விபரங்களை அந்நாட்டு சுகாதார அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடபட்டு உள்ளது. அதுமட்டுமல்லாமல் 56 நபர்கள் உயிரிழந்தனர். இதன் காரணமாக இதுவரையிலும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழன்ந்தோரின் எண்ணிக்கை 35,069 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரேநாளில் 20,383 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 39,97,786ஆக அதிகரித்துள்ளது.

இப்போது 2,01,232 நபர்கள் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 261 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 153 நபர்களுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. நாடு முழுதும் சனிக்கிழமை மட்டும் மட்டும் 25,702 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டு இருப்பதாகவும், குறைந்தபட்சம் 84.2 % பேருக்கு முதல் தவணை டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும்,  79 % பேருக்கு 2 தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளதாகவும், 48.5 % பேருக்கு பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |