Categories
உலக செய்திகள்

மலேசிய நாடாளுமன்றம் கலைப்பு… நவம்பர் 19ஆம் தேதி பொது தேர்தல்…!!!!

மலேசியாவில் 2020 ஆம் வருடம் பிரதமராக இருந்த முகாதிர் முகமது பதவி விலகியுள்ளார். இதனை அடுத்து அதே வருடத்தின் மார்ச் ஒன்றாம் தேதி முகைதீன் யாசின் பிரதமர் பதவிக்கு பொறுப்பேற்றுள்ளார். ஆனால் அவருக்கு ஆதரவளித்து வந்த கூட்டணி கட்சி எம்பிகள் ஆதரவை திரும்ப பெற்றதால் பதவி விலகினார். இதனை அடுத்து கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி இஸ்மாயில் சப்ரி யாக்கூப் பிரதமர் ஆகியுள்ளார். ஆனாலும் அங்கு அரசியல் ஸ்திரத்தன்மை இல்லை. இதனால் கடந்த பத்தாம் தேதி பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கூப் புதிதாக தேர்தல் நடத்த வசதியாக மலேசியா நாடாளுமன்றத்தை கலைத்துள்ளார்.

இந்த சூழலில் அங்கு நவம்பர் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என அந்த நாட்டின் தேர்தல் கமிஷன் நேற்று அறிவித்துள்ளது வேட்பு மனு தாக்கல் செய்து வருகிற ஐந்தாம் தேதி தொடங்கும் என தேர்தல் கமிஷன் தலைவர் அப்துல் காணி அறிவித்துள்ளார். மேலும் இந்த தேர்தலுக்காக மூன்று லட்சத்து 63 ஆயிரத்து 515 பணியாளர்கள் 8,958 வாக்கு மையங்களில் பணியாற்றுவார்கள் அங்கு 2 கோடியே 11 லட்சத்து 73 ஆயிரத்து 638 வாக்காளர்கள் வாக்குரிமை பெற்றிருக்கின்றனர்.

Categories

Tech |