Categories
உலக செய்திகள்

மலேசிய மன்னருக்கு அனுப்பிய பிரதமர் மகாதீர் முகமதுவின் ராஜினாமா ஏற்பு!

பலத்த அரசியல் எதிர்ப்புகளுக்கு இடையே மலேசிய பிரதமர் மகாதீர் முகமது தமது பதவியை ராஜினாமா செய்த நிலையில் அந்நாட்டு மன்னர் அவரது ராஜினாமா ஏற்றுக்கொண்டுள்ளார்.

2003ம் ஆண்டு அரசியலில் இருந்து ஓய்வுபெற்றவர் மகாதீர் மொஹமத். உலகின் மிகவும் வயதான பிரதமர் என்று சிறப்பை பெற்றவர்தான் 94 வயது நிரம்பிய மகாதீர் மொஹமத். கடந்த 2018ல் இவர் மீண்டும் மலேசியாவின் பிரதமர் ஆன போது உலகமே இவரை கொண்டாடியது. அந்நாட்டு ஆளும் கட்சியின் ஊழல்களுக்கு இடையில் தான் தேர்தலை சந்தித்து மகாதீர் மொஹமத் வெற்றிபெற்றார்.

மலேசியன் யுனைட்டட் இண்டிஜினியஸ் கட்சியை சேர்ந்த மகாதீர் மொஹமத், அந்நாட்டு இன்னொரு அரசியல் தலைவரான அன்வர் இப்ராஹிம் கட்சியான பீப்பிள் ஜஸ்டிஸ் கட்சியுடன் சேர்ந்து கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தார். ஆனால் இந்த கூட்டணிக்குள் கடந்த சில நாட்களாக பெரிய அளவில் சண்டை நிலவி வந்தது. இதனால் மகாதீர் மொஹமத், அன்வர் இருவரும் மாறி மாறி ஒருவரையொருவர் விமர்சித்து கொண்டனர்.

இந்நிலையில் இன்று நேற்று திடீர் திருப்பமாக மகாதீர் மொஹமத் பதவி விலக முடிவு செய்துள்ளதாக அறிவித்தார். மேலும் தனது ராஜினாமா கடிதத்தை மலேசிய மன்னரிடம் கொடுத்தார். இதனால் மலேசிய அரசியலில் பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அவரது ராஜினாமாவை மலேசிய மன்னர் ஏற்றுக் கொண்டு மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை மகாதீரை இடைக்காலப் பிரதமராக நியமித்துள்ளார்.

Categories

Tech |