கொரோனா உள்ளிட்ட பல நோய்களிலிருந்து மீண்டு வந்த நபர் விஷ பாம்பு கடியிலிருந்தும் மீண்டு வந்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த இயன் ஜோன்ஸ் என்ற நபர் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் தங்கியிருந்துள்ளார். இவருக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அதிலிருந்து மீண்டு வந்த அவர் நலமாக இருந்துள்ளார். இவருக்கு இதற்கு முன்னதாக டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ஆனால் அனைத்து நோய்களிலும் மன உறுதியுடன் எதிர்கொண்டு மீண்டு வந்த அவருக்கு மீண்டும் ஒரு பிரச்சினை காத்திருந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரை விஷம் கொண்ட ராஜநாகம் ஒன்று கடித்துள்ளது.
இதையடுத்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் அதில் வைரஸ் தோற்று உறுதியாகவில்லை. ஆனால் பாம்பு கடித்ததற்கான அறிகுறிகள் மட்டுமே காணப்பட்டுள்ளன.
ஆனால் அவர் எதை கண்டும் பயப்படவில்லை என்பதுதான் இதில் ஆச்சரியமான விஷயம். மேலும் ஜோன்ஸ் பாம்பு கடியை தைரியமாக எதிர்கொண்டு சிகிச்சைக்கான முழு ஒத்துழைப்பும் மருத்துவர்களுக்கு அளித்துள்ளார். தற்போது அவர் அந்த பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளார். அவரது மருத்துவ சிகிச்சைக்கான செலவு மற்றும் மீண்டும் பிரிட்டன் திரும்பும் செலவுக்கு நிதி உதவி கேட்டு அவருடைய மகன் இணையதளத்தில் ஹஸ்டக் ஒன்றை உருவாக்கி உள்ளார்.