கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு பகுதியில் சஜி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினர் ஆறு பேருடன் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளார். இந்நிலையில் ஊட்டி- கூடலூர் சாலை காமராஜர் சாகர் அணை வளைவு பகுதியில் திரும்ப முய ன்ற போது எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்தது.
இதனால் இடுப்பாடுகளுக்குள் சிக்கியிருந்த 6 பேரையும் வாகன ஓட்டிகள் மீட்டு ஊட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான காரை மீட்டனர். மேலும் சமவெளி பகுதியில் ஓட்டுவது போல வாகனங்களை மலைப்பகுதியில் ஓட்ட கூடாது என போலீசார் சுற்றுலா பயணிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.