கர்நாடக மாநிலத்திலிருந்து தக்காளி லோடு ஏற்றிக்கொண்டு ஈரோடு நோக்கி சரக்கு வாகனம் சென்று கொண்டிருந்தது. இந்த வாகனத்தை மாசிலாமணி என்பவர் ஒட்டி சென்றுள்ளார். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள திம்பம் மலைப்பாதை 3-வது வளைவில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் சாலையில் கவிந்தது.
இந்த விபத்தில் மாசிலாமணி அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். மேலும் வாகனம் சாலையோரம் கவிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.