Categories
தேசிய செய்திகள்

மலைப்பாதையில் செல்ல முடியாமல் சிக்கிய “அர்ஜூனா பீரங்கி” …!!

குன்னூரில் உள்ள வெல்லிங்டன் ராணுவ மையத்தில் கண்காட்சியில் வைப்பதற்காக கொண்டுவரப்பட்ட அர்ஜுனா பிரங்கி மலை பாதைகளில் செல்ல முடியாமல் சிக்கியதால் 16 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போரின் போது பயன்படுத்தப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ராணுவ தளவாடங்கள் புதுப்பிக்கப்பட்டு வெல்லிங்டன் ராணுவ மையத்தில் கண்காட்சியில் வைக்கப்பட்டு வருகின்றனர். இந்த கண்காட்சியில் வைப்பதற்காக இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்பட்ட அர்ஜுனா பீரங்கியை பீகாரிலிருந்து ராட்சத வாகனம் மூலம் குன்னுர் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. பெங்களூரு வந்தடைந்த அந்த பீரங்கி நேற்று மாலை உதகை, கூடலூர் மலைப்பாதையை வந்தடைந்தது.

மலைப்பாதையில் செல்ல முடியாமல் கூடலூர் பகுதியில் உள்ள வளைவில் பீரங்கி சிக்கி உள்ளது. இதனால் சுமார் 16 மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் பீரங்கியை கொண்டு செல்ல ராணுவ வீரர்களும் காவல்துறையினரும் போராடி வருகின்றனர்.

Categories

Tech |