Categories
தேசிய செய்திகள்

மலைப்பாதையில் பள்ளத்தாக்கில் பாய்ந்த பேருந்து… பயணிகளை மயிரிழையில் காப்பாற்றிய டிரைவர்…!!

பள்ளத்தாக்கில் பாதி கவிழ்ந்த நிலையில் பஸ் மாட்டிக்கொண்டு சிக்கித் தவித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இமாசலபிரதேச மாநிலம், சிர்மாவுர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரு தனியார் பேருந்து ஒன்று 22 பயணிகளுடன் பயணம் சென்று கொண்டிருந்தது. அப்போது மலைப்பாங்கான பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஷில்லாய் என்ற இடத்திற்கு சென்று கொண்டிருந்த போது திடீரென்று பஸ்சின் முன்பக்க டயர் வெடித்து தறிகெட்டு ஓடி தடுப்பு சாலையை உடைத்து பள்ளத்தாக்கில் கவிழும் நிலைக்கு உருவானது.

இந்த நிலையில் பயணிகள் அச்சத்தில் அலறினார்கள். ஆனால் டிரைவர் மிகவும் துரிதமாக செயல்பட்டு விபத்தை தவிர்த்து பயணிகளை காப்பாற்றினார். பின்னர் மீட்பு பிரிவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர் பயணிகளை பத்திரமாக மீட்டனர். இதையடுத்து துரிதமாக செயல்பட்ட டிரைவருக்கு அனைவரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர்.

Categories

Tech |