Categories
தேசிய செய்திகள்

 மலைப்பாதை விபத்து… அந்தரத்தில் தொங்கிய பேருந்து… உயிர் தப்பிய காவல் படை…!!!

உத்தரகாண்ட் மாநிலம் முசோரி அருகே காவல்படையினர் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர்.

உத்தரகாண்ட் மாநிலம் முசோரி அருகே இந்தோ திபெத்திய எல்லை காவல் படையை சேர்ந்த காவல் அதிகாரிகள் சிலர் பேருந்தில் இன்று சென்று கொண்டிருந்தனர். அப்பகுதி முழுவதும் குறுகிய வளைவுகள் இருப்பதால், சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறியது. அவ்வாறு தடுமாறிய பேருந்து, வளைவில் இருந்த ஒரு கட்டிடத்தின் மீது மோதி நின்றது. இந்த கொடூர விபத்து கேம்ட் நீர்வீழ்ச்சி அருகே ஏற்பட்டது. பேருந்தின் முன் பகுதியில் அந்தரத்தில் தொங்கியது.

அதனால் பேருந்திலிருந்த வீரர்கள் அனைவரும் அச்சத்தில் ஆழ்ந்தனர். அதன்பிறகு ஒவ்வொருவராக பேருந்தில் இருந்து மெதுவாக கீழே இறங்கினர். ஆனால் இந்த விபத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.பேருந்து இன்னும் கொஞ்சம் வேகமாக வந்து இருந்தால் கட்டாயம் ஆழமான பள்ளத்தில் விழுந்து உயிர் பலி ஏற்பட்டிருக்கக் கூடும்.

Categories

Tech |