மலைப் பிரதேசங்களில் மக்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்ற விட்டால் மீண்டும் தீவிர ஊரடங்கு போடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தற்போது தான் குறைந்து கொண்டு வருகின்றது. இதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு பல கட்டுப்பாடுகளை விதித்தது. பல மாநிலங்களில் படிப்படியாக தொற்று குறைந்து கொண்டு வருவதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் சுற்றுலாத் தலங்களான மலை பிரதேசங்களுக்கு இ பாஸ் தேவையில்லை என்று அறிவித்துள்ளது.
இதன் காரணமாக நாடு முழுவதும் உள்ள பல்வேறு மலைப்பிரதேசங்களில் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலை மோதுவது மிகுந்த அதிர்ச்சியை அளிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மலைப் பிரதேசங்களில் மக்கள் கொரோனா விதிமுறைகளை சரியாக பின்பற்றவில்லை என்றால் மீண்டும் தீவிர ஊரடங்கு போடப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.