ரஷ்யா கிழக்கு பகுதியில் கம்சாட்கா தீபகற்பத்தில் இருந்து அன்டோனாவ் ஆன்-26 ரக பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானத்தில் 22 பயணிகளும் 6 ஊழியர்களும் பயணம் செய்தனர். இந்த விமானம் தரை இறங்க முயன்றபோது திடீரென கட்டுப்பாட்டு அறையுடன் இருந்த தொடர்பு துண்டிக்கப்பட்டது. மேலும் அந்த விமானம் தரை இறங்கவில்லை. இதையடுத்து விமானம் மாயமானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தற்போது 28 பேருடன் மாயமானதாக கருதப்பட்ட விமானம் தரையிறங்கும் போது மலைமுகட்டில் மோதி விபத்துக்குள்ளாகி இருக்கிறான் என்று அஞ்சப்படுகின்றது. மேலும் கடற்படை மற்றும் இராணுவ வீரர்களின் தீவிர தேடுதல் வேட்டையின் பயனாக காணாமல் போன விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உடல்களை தேடும் பணியில் ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டுள்ளன. மேலும் பலானா நகரத்தில் இருந்து 5 மீட்டர் தூரத்தில் இந்த விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சில பாகங்கள் கடற்கரையிலும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் விமானத்தில் பயணம் செய்த 28 பேரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகின்றது.