Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மலையாள சூப்பர் ஸ்டார் படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத்… டுவிட்டரில் பதிவு… வாழ்த்தும் ரசிகர்கள்…!!!

நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் ‘ஆராட்டு’ என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

தமிழ் திரையுலக பிரபல நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் தனது அசத்தலான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். இவர் விக்ரம் வேதா, இவன் தந்திரன், கே13, ரிச்சி ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் துணிச்சலான பெண்ணாக தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். மேலும் இவர் ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் திரைப்படங்கள் நடித்து வருகிறார்.

 

இந்நிலையில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்கும் ‘ஆராட்டு ‘ என்ற திரைப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இது குறித்த தகவலை அவரே  தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நேற்று துவங்கிய படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்திடம் மோகன்லால் ‘வெல்கம் டு மை ஃபேமிலி’ என்று கூறியுள்ளார். அது தனக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது என ஷ்ரத்தா பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் நடிகை ஷ்ரத்தாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |