Categories
சினிமா தமிழ் சினிமா

மலையாள படத்தின் தெலுங்கு ரீமேக் … பிரபல நடிகருக்கு அப்பாவான சமுத்திரக்கனி … வெளியான தகவல்கள்…!!!

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் ராணாவுக்கு அப்பாவாக சமுத்திரக்கனி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .

மலையாள திரையுலகில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் ‘அய்யப்பனும் கோஷியும் ‘. இயக்குனர் சாஷி இயக்கிய இந்த படத்தில் பிஜூமேனனும் பிருத்விராஜும் நடித்திருந்தனர் . இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது . இதையடுத்து தென்னிந்திய மொழிகளில் இந்த படத்தை ரீமேக் செய்யும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது .  இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை தயாரிப்பாளர் ஆடுகளம் கதிரேசன் வாங்கியுள்ளார் . மேலும் தெலுங்கு ரீமேக்கிற்க்கான உரிமையை தயாரிப்பாளர் சூரியதேவர நாகவம்சி வாங்கியுள்ளார் . இந்த படத்தில் பிஜூமோனன் நடித்த அய்யப்பன் கதாபாத்திரத்தில் பவன் கல்யாணும் , பிரித்திவிராஜ் நடித்த கோஷி கதாபாத்திரத்தில் ராணாவும் நடிக்கின்றனர் .

Ayyappanum Koshiyum movie review: Prithviraj and Biju Menon are  made-for-each-other sparring partners - Entertainment News , Firstpost

இதையடுத்து இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களான அய்யப்பன் மற்றும் கோஷியின் மனைவிகள் கதாபாத்திரத்திற்கு சாய்பல்லவி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளனர். இந்நிலையில் இந்த படத்தில் ராணாவுக்கு அப்பாவாக நடிகர் சமுத்திரகனி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . சமுத்திரகனி , ராஜமவுலியின் மெகா பட்ஜெட் படமான ‘ஆர் ஆர் ஆர்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார‌் . மேலும் இவர் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான வைகுண்டபுரம் படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் .

Categories

Tech |