Categories
தேசிய செய்திகள்

மலையிலிருந்து விழுந்து நொறுங்கிய…. பள்ளி மாணவர்கள் சென்ற பேருந்து….. 16 பேர் பலி….!!!!

மலைப்பகுதியில் நிகழ்ந்த கோர விபத்தில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இமாச்சலப் பிரதேசம் குல்லு மாவட்டத்தில் பேருந்து ஒன்று சைஞ்ச் என்ற பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து மலைப் பாங்கான இடத்தில் இடத்தில் காலை 8 மணி அளவில் ஜங்கலாய் என்றும் இடத்தில் தவறி பள்ளத்தாக்கில் விழுந்தது. இந்த விபத்தில் சிக்கி இதுவரை 16 பேர் உயிரிழந்தனர். பேருந்தில் 40-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

இதில் பெரும்பாலான பள்ளி மாணவர்கள் பயணம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அங்குள்ள உள்ளூர் வாசிகளின் உதவியுடன் காவல்துறை மீட்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூபாய் இரண்டு லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூபாய் 50,000 நிவாரணத் தொகையை பிரதமர் நிதியில் இருந்து வழங்கப்படும்  என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |