Categories
மாநில செய்திகள்

மலையேறும் பக்தர்கள் அனைவருக்கும் “பாஸ்” கட்டாயம்…. வெளியான அறிவிப்பு…!!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவானது இன்று பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. இதனால் கிட்டத்தட்ட 40 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக லட்சக்கணக்கான மக்கள் வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் கலந்து கொள்வார்கள்.

இந்நிலையில், இன்று அண்ணாமலையார் மலை மீது ஏற 2,500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ள்ள நிலையில், அவர்கள் அனைவருக்கும் பாஸ் விநியோகம் செய்யப்படுகிறது.
மலை ஏறும் பக்தர்களுக்கு அவர்களின் புகைப்படம் மற்றும் பார் கோடு உடன் இந்த பாஸ் வழங்கப்படுகிறது. இது திருவண்ணாமலை – செங்கம் சாலையில் அமைந்துள்ள அரசு கல்லூரியில் வைத்து தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

Categories

Tech |