திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவானது வருகிற டிசம்பர் 6ஆம் தேதி அன்று பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. இதனால் கிட்டத்தட்ட 40 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக லட்சக்கணக்கான மக்கள் வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் கலந்து கொள்வார்கள்.
எனவே திருவிழாவை பாதுகாப்பாக கொண்டாடுவதற்கு மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நாளில் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வரும் டிச. 6ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தீபத்திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க ஏதுவாக நெல்லை, தூத்துக்குடி, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து டிச. 5, 6 ஆகிய தேதிகளில் 2500 சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது.
இந்நிலையில், தீபத்திருநாள் அன்று அண்ணாமலையார் மலை மீது ஏற 2,500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் சிறப்பு மையம் திறக்கப்பட்டு, மலை ஏறும் பக்தர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட உள்ளது.