Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மலைவாழ் மக்களின் கோரிக்கை…. 1 கோடியே 91 லட்சம் நிதி ஒதுக்கீடு…. சிறப்பாக நடைபெற்ற பூமி பூஜை….!!!

தார்ச்சாலை அமைக்கும் பணி பூமி பூஜையுடன் தொடங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை பகுதியில் இருக்கும் வண்டகப்பாடி கிராமத்தில் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சாலை வசதி இல்லாததால் மலைவாழ் மக்கள் சாலை வசதி அமைத்துத் தரும்படி அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் காரணமாக மட்டப்பட்டு கிராமத்தில் இருந்து வண்டகப்பாடி கிராமம் வரை தார்ச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக 1 கோடியே 91 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை, உதவி பொறியாளர் அருண் ராஜா, பணி மேற்பார்வையாளர் சக்திவேல், ஊராட்சி மன்ற தலைவர்கள் செல்வராஜ், கல்யாணி கிருஷ்ணன், ரத்தினம், துணைத்தலைவர் சித்ரா சந்திர வேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |