மலைவாழ் மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே புதுப்பட்டு கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி தொடங்கியது. இந்தப் பணியை வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார். அதன்பிறகு புளியங்கொட்டை பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு வீட்டுமனை பட்டா மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதனையடுத்து புதிய ஊராட்சி மன்ற கட்டிடங்கள், மகளிர் மேம்பாட்டு குழு கட்டிடம், பகுதி நேர ரேஷன் கடை போன்றவைகளை திறந்து வைத்தார். இந்த விழாவின்போது மாவட்ட ஊராட்சி குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன், ரவிச்சந்திரன், சங்கராபுரம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் அசோக் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.