Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இன்னும் எதையெல்லாம் மூட போறாங்களோ….மலை கோட்டை பகுதிக்கு செல்ல தடை… ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற மக்கள்…!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகமா பரவுவதால் மலைகோட்டை பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள சங்ககிரி மலைப் பகுதியில் வரதராஜ பெருமாள் கோவில், கோட்டை மாரியம்மன் கோவில் மற்றும் கேசவ பெருமாள் கோவில் ஆகிய வழிபாட்டு தலங்கள் அமைந்துள்ளது. இந்நிலையில் நாள்தோறும் மலைக் கோட்டையை சுற்றி பார்க்கவும் அங்குள்ள கோவில்களில் சாமியை தரிசிக்கவும் சுற்றுலா பயணிகள் மற்றும் திரளான பகதர்கள் செல்வது வழக்கம்.

இதனையடுத்து கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை  தடுக்கும் வகையில் பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் ஒன்றான இந்த மலைகோட்டை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |