Categories
மாநில செய்திகள்

மலை ரயிலில் முதன் முறையாக….இந்த பணியில் அசத்தும் பெண்…. கிடைத்த சூப்பர் வாய்ப்பு….!!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் இடையே உள்ள பகுதியில் மலை ரயில் ஒன்று இயங்கி வருகிறது. இவ்வாறு இந்த ரயிலானது, நூற்றாண்டு காலமாக பல் சக்கரத்தின் உதவியுடன், அந்த பகுதியில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்களது வாழ்நாளில் ஒரு நாளிலாவது, இந்த ரயிலில் பயணிக்க வேண்டும் என பெரும்பாலானவர்களின் மிகப்பெரிய ஆவலாக உள்ளது.

இதையடுத்து இந்த மலை ரயிலானது, 208 வளைவுகளில் வளைந்து செல்லும். மேலும் 16 குகைகளுக்குள் புகுந்து, அதன்பின் 250 பாலங்களையும் கடந்து செல்லக்கூடியது. இவ்வாறு இந்த ரயிலில், 5 மணி நேரம் பயணம் செய்வது, அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இந்த மலைப் பாதையில், இயங்கும் மலை ரயிலுக்கு பிரேக்ஸ் மென் என்ற பணியானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் இந்த பணிக்கு இதுநாள் வரையிலும், ஆண்கள் மட்டுமே அமர்த்தப்பட்டு வந்த நிலையில், முதல்முறையாக குன்னூர் பகுதியை சேர்ந்த சிவஜோதி (வயது 45) என்ற பெண் பிரேக்ஸ் உமன் என்ற, இந்த பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இவர் குன்னூரில் உள்ள ரயில்வே பணிமனையில், கடந்த 8 ஆண்டுகளாக கேரேஜ் பிரிவில் பணிபுரிந்து வந்துள்ளார். மேலும் இவருக்கு இதில் ஆர்வம் இருந்ததால், மேட்டுப் பாளையம், ஈரோடு ஆகிய இடங்களில், தெற்கு ரயில்வே சார்பில் முறையான பயிற்சியானது இவருக்கு அளிக்கப்பட்டது.

இதையடுத்து இவர் தற்போது, உதகை, குன்னுார், மேட்டுப்பாளையம் என்ற பகுதிகளுக்கு இடையே இயக்கப்படும் மலை ரயிலில், பிரேக்ஸ் உமன் பணியை தொடங்கியுள்ளார். மேலும் இவ்வாறு இந்த மலை ரயிலில், பிரேக்ஸ்  மென் பதவிக்கு பெண் ஒருவரை தெற்கு ரயில்வே, அமர்த்தியிருப்பது இதுவே முதல் முறை ஆகும்.

Categories

Tech |