மலை ரயிலில் பயணிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியிலிருந்து மேட்டுப்பாளையத்துக்கு மலை ரயிலில் செல்ல முதல் வகுப்புக்கு 600 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இரண்டாம் வகுப்புக்கு 295 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மலை ரயிலில் பயணிப்பதற்காக சுற்றுலா பயணிகள் திரண்டனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தண்டவாளத்தில் விழுந்த ராட்சத பாறையால் மலை ரயில் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து சீரமைப்பு பணிகள் முடிந்த பிறகு மலை ரயில் பயணம் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது.
இந்த மலை ரயிலில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பயணிக்க முடியும். இதற்கு முன்னதாக முன் பதிவு செய்யாதவர்களுக்கு என தனியாக பெட்டி அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் தற்போது அந்த பெட்டி இணைக்கப்படாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது, முன்பதிவு செய்யாதவர்களும் மலை ரயிலில் பயணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.