ரஜினி நடிக்க உள்ள புதிய திரைப்படம் குறித்த செய்தி வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் 169-வது படம் ஜெயிலர். இந்தப் படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணா ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கின்றார்.
தற்போது இப்படத்தின் படபிடிப்பானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற நிலையில் ரஜினியின் அடுத்த திரைப்படத்தை சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்தின் அதிகார அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையில் ரஜினியின் அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்து செய்தி பரவி வருகின்றது. தற்போது ரஜினி தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தாணு தயாரிப்பில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகின்றது. மேலும் பேட்டி ஒன்றில் தாணு, தேசிங்கு பெரியசாமி தன்னிடம் ஒரு கதையை கூறி இருப்பதாகவும் அது பிரம்மாதமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.