மல்யுத்த வீரர் ஜான் ஃபெலிக்ஸ் ஆண்டனி செனா பற்றிய சில தகவல்களைப் பார்க்கலாம். இவர் கடந்த 1973-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி அமெரிக்காவில் பிறந்தார். இவர் சிறுவயதில் மிகவும் ஒல்லியாக இருந்ததால் ஜான் செனா பள்ளியில் படிக்கும் அவரை சக மாணவர்கள் கேலி செய்துள்ளனர். இந்நிலையில் ஜான் செனாவின் தந்தை அவரை ஒரு மல்யுத்த போட்டிக்கு அழைத்து சென்றுள்ளார். அதைப் பார்த்த ஜான் செனா கடுமையான உடல் பயிற்சிகள் செய்து பாடிபில்டிங் செய்துள்ளார். இதனையடுத்து ஜான் செனா கால்பந்து விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தனது தந்தையுடன் சண்டை போட்டுவிட்டு கடந்த 1998-ம் ஆண்டு கலிபோர்னியாவுக்கு சென்றுள்ளார். ஆனால் அவர் கால்பந்து விளையாட்டில் சிறப்பாக விளையாடினாலும் கூட அவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை.
இதனால் ஜான் செனா காவல்துறையில் சேரவேண்டும் என்ற நோக்கத்தோடு சென்றுள்ளார். ஆனால் அவரை காவலர் பதவிக்கு தகுதியானவர் இல்லை என நிராகரித்து விட்டனர். இதைத் தொடர்ந்து ஜான் செனா கார் ஓட்டுநர் வேலை, நெய்வி போன்றவற்றில் சேர்வதற்கு முயற்சி செய்துள்ளார். ஆனால் அவரை நிராகரித்து விட்டனர். எனவே ஜான் செனா ஒரு ஜிம்மில் கழிவறை சுத்தம் செய்யும் வேலைக்கு சேர்ந்துள்ளார். இவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்ததை பார்த்த ஒருவர் ஜான் செனாவை மல்யுத்த போட்டியில் சேர்த்துவிட்டார். ஆனால் அவர் அப்போது மல்யுத்த போட்டியில் வெற்றி பெறுவார் என யாரும் நினைக்கவில்லை. இருப்பினும் தன்னுடைய விடாமுயற்சியால் ஜான் செனா இன்று மல்யுத்த உலகின் ராஜாவாக திகழ்கிறார்.