இங்கிலாந்து நாட்டில் உள்ள பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போட்டியில் இந்திய வீரர்கள் 3 தங்கப்பதக்கம் உட்பட 6 பதக்கங்களை வென்றுள்ளனர். இந்நிலையில் மல்யுத்த போட்டியில் உள்ள அனைத்து பிரிவு களிலும் இந்திய வீரர்கள் வெற்றி செய்ததை மோஹித் கிரேவால் உறுதி செய்துள்ளார். இதன் காரணமாக பிரதமர் நரேந்திர மோடி காமன்வெல்த் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களை பாராட்டி ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில் நம் நாட்டைச் சேர்ந்த மல்யுத்த வீரர்களால் வெளிப்படுத்தப்பட்ட நம்ப முடியாத வடிவம். இந்த பதக்கப் பட்டியலில் மோகித் க்ரேவால் இணைந்துள்ளார். இவர் 1 வெண்கல பதக்கத்தை வீட்டிற்கு கொண்டு வரும்போது அவருடைய கூர்மையான கவனம் தனித்து நிற்கிறது. அவருக்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்ததோடு இனிவரும் காலங்களில் மேலும் பல சாதனைகளை குவிப்பார் எனவும் பதிவிட்டுள்ளார்.