Categories
மாநில செய்திகள்

மல்லிகை பூ வைக்கும் பெண்களே….. முதலில் இத படிங்க…. ஷாக் நியூஸ்….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் முதல் வடகிழக்கு பருவமழை காரணமாக மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். சந்தைகளில் காய்கறிகளின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. காய்கறிகளை வாங்குவதற்கு கூட மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். பெருமழை காரணமாக விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி வியாபாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பூக்களின் விலையும் இரண்டு மடங்கு உயர்ந்து விற்பனையாகி வருகின்றது.

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகை பூ விலை நான்காயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது முகூர்த்த நாட்கள் என்பதால் பூக்களின் தேவை அதிக அளவில் இருக்கும். இப்படிப்பட்ட நேரத்தில் ஒரு கிலோ மல்லிகை பூவின் விலை நான்காயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்வது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ 2500 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் தற்போது நான்காயிரம் ரூபாய் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து முல்லைப்பூ கிலோ 1500 ரூபாய்க்கும், பிச்சிப் பூ கிலோ 1200 ரூபாய்க்கும், அரளிப்பூ கிலோ 400 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகின்றது.

Categories

Tech |