Categories
சினிமா தமிழ் சினிமா

“மல்லிப்பூ” பாடலை தான் எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கிறேன்….. சீமான் வெளியிட்ட பதிவு…. செம வைரல்….!!!!!

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்திருந்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் கடந்த 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சித்தி இத்தானி, ராதிகா சரத்குமார் போன்ற பலர் நடித்துள்ளனர். ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இந்த படத்தில் வெளியான பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்தது அதிலும் குறிப்பாக மல்லிப்பூ என்று தொடங்கும் பாடல் அனைவரின் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த சூழலில் இயக்குனர் சீமான் மல்லிப்பூ பாடலை அண்மை நாட்களாக கேட்டுக் கொண்டிருக்கிறேன் என தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, என்னுடைய அன்பு தம்பி சிலம்பரசன் அவர்கள் நடித்து தமிழ் பெயர் இனத்தின் பெருமைமிகு இசைத்தமிழின் ஆருயிர் இளவல் ஏ ஆர் ரகுமான் அவர்கள் இசையமைத்து வெளிவந்திருக்கின்ற வெந்து தணிந்தது காடு படத்தில் என் பாசத்திற்கும் அன்பிற்கும் உரிய அக்கா தாமரை அவர்கள் எழுதி பாடகி மதுஸ்ரீ அவர்கள் இனிமையான குரலில் பாடி இருக்கின்ற மல்லிப்பூ எனும் பாடலை நான் சில நாட்களாக எண்ணற்ற முறை என் பயணத்தின் போதும் என் ஓய்வு நேரங்களில் போதும் கேட்டுக் கொண்டே இருக்கின்றேன்.

அயலகத்தில் பணிபுரியும் தனது அருமை கணவனை நினைத்து அன்பு மனைவி பாடுவது போல் அமைந்திருக்கும். இந்த பாடல் வரிகளும் இசை கோர்ப்பும் தனித்துவமாக அமைந்திருப்பது மனதை மயக்குகின்றது. கணவனை பிரிந்து இருக்கின்ற பெண்களின் ஏக்கத்தையும் வலியையும் தன் மென் அழகு தமிழால் அப்படியே வடித்து இருக்கின்ற அக்கா தாமரை அவர்களுக்கும் அந்த வரிகளுக்கு மிகச்சிறந்த இசையால் உயிரூட்டி இருக்கும் நம் தலைமுறையின் ஈடு இணையற்ற இசை தமிழில் அன்பு இளவல் ஏ ஆர் ரகுமான் அவர்களுக்கும் எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உங்களது பணி தொடரட்டும். மேலும் அக்கா தாமரை அவர்களுக்கு இது போன்ற மிகச் சிறந்த பாடல்கள் எழுதுவதற்கான வாய்ப்பை தொடர்ந்து வழங்கி வரும் இயக்குனர் அன்பு சகோதரன் கௌதம் மேனன் அவர்களுக்கும் இந்த படத்தை தயாரித்திருக்கும் சகோதரர் ஐசரி கணேஷ் அவர்களுக்கும் எனது பேரன்பும் வாழ்த்துக்களும் என பதிவிட்டு இருக்கிறார்.

Categories

Tech |