Categories
அரசியல்

மல்லி….! மல்லி….! மதுரை மல்லி….. அதிக விலைக்கு விற்பனை….. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்…..!!!!

மதுரையில் மல்லிகை பூ விலை கிலோவுக்கு 1,100 ரூபாய் விற்பனையாகி வருகின்றது. இதனால் மற்ற பூக்களின் விலையும் இரு மடங்கு அதிகரித்துள்ளது.

மல்லிகைப் பூ என்றாலே அது மதுரை தான். அந்த அளவுக்கு மல்லிகை பூ மதுரையில் மிகவும் பிரபலம். தற்போது மல்லிகை பூவின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. மதுரை மாட்டுத்தாவணியில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சித்திரை மாதம் முடிந்து வைகாசி மாதம் தொடங்கியுள்ள நிலையில் முகூர்த்த நாட்கள் வர உள்ளதால், மல்லிகைப் பூ தேவை அதிகமாக இருக்கும். இதனால் மதுரை மலர் சந்தையில் மல்லிகை பூ கிலோ 1000 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. அதேபோல் முல்லை பூ 100 ரூபாய்க்கும் , பிச்சிப்பூ 500 ரூபாய்க்கும், கனகாம்பரம் 600 ரூபாய்க்கு, சம்பங்கி 150 ரூபாய்க்கும், தக்காளி ரோஸ் 150 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகின்றது.

பூக்களின் விலை இன்று இரண்டு மடங்கு அதிகரித்து உள்ளது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு 500 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த மல்லிகை பூ தற்போது 1,000 ரூபாயாக உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அடுத்து வரும் நாட்களில் கட்டாயம் பூக்களின் விலை இன்னும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகைப்பூ 450 ரூபாய்க்கு விற்பனையாகி வந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |