நியூயார்க்கில் உள்ள முதியோர் இல்லத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் நியூயார்க் நகரில் ஸ்பிரிங்வாலே என்ற பகுதியில் முதியோர் இல்லம் ஒன்று உள்ளது. இங்கே ஆதரவற்ற வயதானவர்கள் நிறைய பேர் தங்கி வருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று திடீரென அந்த முதியோர் இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த தீ மளமளவென கட்டிடம் முழுவதும் பரவியுள்ளது. மேலும் இந்த தீயினால் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததாகவும் கூறப்படுகின்றது.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரண்டு மணி நேரமாக தீயை அணைக்க போராடி வருகின்றனர். மேலும் இந்த விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை குறித்த உறுதிபட தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. இச்சம்பவத்தை நேரில் கண்ட நபர் ஒருவர் அதனை வீடியோ எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
🇺🇸 — DEVELOPING: Large fire on Lafayette St in Spring Valley, NY. Fire Department and Hatzolah are on scene with reports of trapped people inside. pic.twitter.com/Ei1jsz5qeI
— Belaaz News (@TheBelaaz) March 23, 2021