Categories
தேனி மாவட்ட செய்திகள்

மளமளவென பரவிய தீ…. மலைப்பகுதியில் தீவிர கண்காணிப்பு…. வனத்துறையினர் விடுத்த எச்சரிக்கை….!!

வருசநாடு மலைபகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டதை தொடர்ந்து வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் சாப்டூர் வனச்சரகத்தில் உள்ள பஞ்சம்தாங்கி மலைபகுதியில் திடீரென காட்டுத்தீ பரவியுள்ளது. இந்த மலைப்பகுதியின் மற்றொரு பகுதி தேனி மாவட்டம் வருசநாடு வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில் மலைப்பகுதியில் பலத்தகாற்று வீசியதால் மளமளவென தீ பரவி வருசநாடு வனப்பகுதியிலும் பரவ தொடங்கியுள்ளது.

இதனையறிந்த வருசநாடு வனத்துறையினர் துரிதமாக செயல்பட்டு உடனடியாக மலைப்பகுதியில் பரவத்தொடங்கிய காட்டுத்தீயை அணைத்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் பஞ்சம்தாங்கி மலைப்பகுதியில் உள்ள செடிகள், புல்வெளிகள் காய்ந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் காட்டுத்தீ எளிதில் பரவக்கூடிய அபாயம் இருந்து வருகிறது.

எனவே காட்டுத்தீ ஏற்படுவதை தடுக்கும் வகையில், எளிதில் தீப்பற்றக்கூடிய தீப்பெட்டி, மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்களை மலைப்பகுதிக்கு எடுத்து செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இந்த தடையை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Categories

Tech |