Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மளமளவென பற்றிய தீ…. எரிந்து நாசமான பண்டல்கள்…. போலீஸ் விசாரணை…!!

தீ விபத்து ஏற்பட்டதால் லாரியில் கொண்டு சென்ற வைக்கோல் பண்டல்கள் எரிந்து நாசமானது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஓவர்சேரியில் இருக்கும் வயலிலிருந்து வைக்கோல் பண்டங்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வலங்கைமான் நோக்கி சென்றுள்ளது. இந்நிலையில் தண்ணீர்குன்னம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென வைக்கோல் பண்டல்கள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த ஓட்டுனர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வைக்கோலில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் அனைத்து வைக்கோல் பண்டல்களும் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |