தென்னை நார் தொழிற்சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் சுமார் 2 கோடி மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள முருகமலை பகுதியில் தனியார் தென்னை நார் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு தொழிற்சாலையில் வைக்கப்பட்டிருந்த தென்னை நார்களில் திடீரென மளமளவென தீ பரவியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் உடனடியாக தொழிற்சாலையை விட்டு வெளியேறி பெரியகுளம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்த முயன்றுள்ளனர். ஆனால் தீயை கட்டுபடுத்த முடியாததால் தேனி, ஆண்டிப்பட்டி, திண்டுக்கலில் இருந்தும் தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டது. இதனையடுத்து சுமார் 10 மணி நேரம் போராடி தென்னை நாரில் பிடித்த தீயை முழுவதுமான அணைத்தனர்.
மேலும் இதுகுறித்து தகவலறிந்து சென்ற பெரியகுளம் சூப்பிரண்டு அதிகாரி முத்துக்குமார், மாவட்ட தீயணைப்பு அலுவலர் கல்யாண்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளனர். இதனைதொடர்ந்து இந்த தீ விபத்தில் சுமார் 2 கோடி மதிப்புள்ள தென்னை னார்கள் தீயில் கருகி சேதமடைந்துள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து தொழிற்சாலையில் தீப்பிடித்து எரிந்ததார்க்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.