தீ விபத்து ஏற்பட்டதால் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகிவிட்டது.
அரியலூர் மாவட்டத்திலுள்ள உத்திரங்குடி கிராமத்தில் விவசாயியான கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு அனுப்பிரியா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் திடீரென கண்ணனின் வீடு தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்ததும் அனுப்பிரியா அலறி சத்தம் போட்டதால் 3 பேரும் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் 9 பவுன் தங்க நகைகள், 75 ஆயிரம் ரூபாய் பணம், ரேஷன் அட்டை, ஆதார் அட்டை, கல்லூரி நோட்டுகள், பத்திரங்கள் போன்ற அனைத்தும் எரிந்து நாசமாகிவிட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.