Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மளமளவென பற்றி எரிந்த தீ…. அலறியடித்து ஓடிய தொழிலாளர்கள்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

பஞ்சு ஆலையில் பற்றி எரிந்த தீயை 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையத்தில் விஸ்வநாதன் என்பவருக்கு சொந்தமான பஞ்சு ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலையில் இருக்கும் பேக்கிங் அறையில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் அலறியடித்து கொண்டு வெளியே வந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஆலையில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தீவிர குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |