பூட்டியிருந்த அரசு டாஸ்மார்க் கடை எதிர்பாரா விதமாக தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள கரூர் பைபாஸ் சாலை பகுதியில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. அங்கு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பூட்டி இருந்த அந்தக் டாஸ்மார்க் கடையில் இருந்து திடீரென கரும்புகை வெளியானது. அப்போது உள்ளே வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் தீயின் சூடு தாங்காமல் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்க்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து மாநகராட்சியில் இருந்து இரண்டு லாரி தண்ணீர் வரவழைக்கப்பட்டு ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பின் தீயை அணைத்தனர். மேலும் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்கள் இந்த விபத்தில் எரிந்து நாசமாகியதாக தீயணைப்பு வீரர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தால் அருகில் இருக்கும் ஜவுளி மற்றும் ஜுவல்லரி கடைகளுக்குள் தீ பரவாமல் தடுக்கப்பட்டு பெரும் சேதம் தவிர்கபட்டுள்ளது. இந்த தீ விபத்து மின்கசிவால் ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.