குடோனில் பற்றி எரிந்த தீயை 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் ராம் நகரில் உசேன் மற்றும் முபாரக் ஆகியோருக்கு சொந்தமான பழைய இரும்பு குடோன் அமைந்துள்ளது. இந்ந குடோனில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து பகுதிகளுக்கும் தீ பற்றி மளமளவென எரிய ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு குடோனில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
ஆனால் இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகிவிட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.