குடோனில் பற்றி எரிந்த தீயை 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் சாலியர் தெருவில் சைமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பழைய இரும்பு, பிளாஸ்டிக் குடோன் நயினார்குளம் பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில் குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்து அதிர்ச்சியடைந்த சைமன் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு குடோனில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர்.
ஆனால் இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த 1 லட்ச ரூபாய் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் அட்டைகள் எரிந்து நாசமாகிவிட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.