பொத்தையில் பற்றி எரிந்த தீயை வனத்துறையினர் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள மீனாட்சிபுரத்தில் முள்ளிமலை பொத்தை அமைந்துள்ளது. இந்நிலையில் வனப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ள இந்த பொத்தையில் ஏராளமான மரம், செடி கொடிகள் இருக்கின்றன. இங்கு நேற்று மாலை நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மரம் மற்றும் செடிகளில் பற்றி எரிந்த தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர். சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வனத்துறையினர் தீயை அணைத்துவிட்டனர்.