தீ விபத்து ஏற்பட்டதால் 6 கடைகள் எரிந்து நாசமானது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் செல்லும் சாலையோரத்தில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடம் அமைந்துள்ளது. இங்கு பிச்சாண்டார் கோவில் பகுதியை சேர்ந்த சிலர் கூரை கொட்டகை அமைத்து இறைச்சி கடை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் ஒரு கடையின் மேற்கூரை தீப்பிடித்து எரிந்து காற்றின் வேகத்தால் அருகிலிருந்த மற்ற கடைகளுக்கும் வேகமாக பரவியது.
இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 6 கடைகளில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் கடைகள் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.