Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மளிகை கடைக்கு சென்ற சிறுமி…. சகோதரர்கள் செய்த காரியம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சிறுமியை கடத்தி சென்று சகோதரருக்கு திருமணம் செய்து வைத்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடி அருகே இருக்கும் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த 15 வயது சிறுமி தனது தாயுடன் சென்றுள்ளார். கடந்த 6-ஆம் தேதி மளிகை கடைக்கு சென்ற சிறுமி நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் சிறுமியின் குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் சிறுமி கிடைக்காததால் வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த சகோதரர்களான தேவராஜ்(22), சீனி(21) ஆகியோர் ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்தது. மேலும் தேவராஜ் தனது தம்பியான சீனிக்கு சிறுமியை திருமணம் செய்து வைத்துள்ளார். இதனை அடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் தேவராஜை போலீசார் கைது செய்து சிறுமியை மீட்டனர். மேலும் தலைமறைக்காக இருக்கும் சீனியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |