மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள தவிட்டுபாளையம் வேலாயுதம் வீதியில் ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் பிரிந்து சென்றதால் மகன் சபரி ஸ்ரீயுடன் ஆனந்தி வசித்து வந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தவிட்டுபாளையம் மார்க்கெட் பகுதியில் இருக்கும் மளிகை கடையில் விடுமுறை நாட்களில் சபரி வேலை பார்த்து வந்துள்ளார்.
நேற்று காலை மளிகை பொருட்களை பாக்கெட் போடுவதற்காக சிறுவன் மின்சார பிளக்கை பொருத்தியதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த சிறுவனை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.