தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மக்களுடைய பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதன் முதற்கட்டமாக ரூபாய் 2000 மக்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் இன்று மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் திட்டம், ரூ.2000 வழங்கும் திட்டம் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். அதன்படி ரேஷன் கடைகளில் கோதுமை மாவு -ஒரு கிலோ, உப்பு -ஒரு கிலோ, ரவை -ஒரு கிலோ, உளுத்தம் பருப்பு- அரை கிலோ, சர்க்கரை – அரை கிலோ, புளி -கால் கிலோ, கடலை பருப்பு – கால் கிலோ, கடுகு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், டீ தூள், சோப்பு, குளியல் சோப்பு வழங்கப்படுகிறது.