குஜராத் மாநிலத்தில் வருகின்ற டிசம்பர் 1ஆம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து பாஜக சார்பாக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி குஜராத்தில் பாஜகவை வெற்றியடைய செய்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு, ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக குஜராத் உயர்த்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் மழலையர் பள்ளி முதல் முதுகலை படிப்பு வரை மாணவிகள் அனைவருக்கும் இலவசமாக கல்வி வழங்கப்படும். தீவிரவாத ஆதரவு சக்திகளை கண்டறிய தனித்துறை அமைக்கப்படும் எனவும் பாஜக தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டுள்ளது.