பள்ளிக் கல்வியில் யோகா மற்றும் ஆயுர்வேத அடிப்படையிலான பாடத்திட்டத்தையும் இணைக்கும் நோக்கம் உள்ளது என்று மத்திய ஆயுஷ் அமைச்சர் தெரிவித்துள்ளார். மழலையர் வகுப்புகள் உட்பட 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி கல்வியில் ஆயுர்வேதம் மற்றும் யோகா அறிவியல் பாடத் திட்டத்தை பள்ளிகளில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பாடத்திட்டத்தை சேர்க்க கல்வி மற்றும் எழுத்தறிவு அமைச்சகத்திற்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. நேரடிப் பல்கலைக்கழக அந்தஸ்தைக் கொண்ட தேசிய ஆயுர்வேத நிறுவனம் இந்தப் பாடத்திட்டத்தை வடிவமைத்துள்ளது என்று கூறியுள்ளார்.