Categories
மாநில செய்திகள்

மழலையர் வகுப்புகளில் மாணவர்களை சேர்க்க மறுக்கும் ஆசிரியர்கள்…!! அதிகாரிகள் கொடுத்த விளக்கம்…!!

தமிழக அரசு பள்ளிகளில் உள்ள மழலையர் வகுப்புகளில் குழந்தைகளை சேர்க்க ஆசிரியர்கள் மறுப்பு தெரிவிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக வைரஸ் தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் தற்போது கடந்த நவம்பர் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் நேரடி வகுப்பிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அரசு பள்ளிகளில் இயங்கிவரும் மழலையர் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

ஆனால் சில குறிப்பிட்ட பள்ளிகளில் உள்ள மழலையர் வகுப்புகளில் குழந்தைகளை சேர்க்க ஆசிரியர்கள் மறுப்பு தெரிவிப்பதாக பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர். இது குறித்து ஆசிரியர்களிடம் கேட்டபோது மேல் அதிகாரிகளின் அனுமதி இன்றி வகுப்புகளில் மாணவர்களை சேர்க்க முடியாது என கூறியுள்ளனர். அரசின் இந்த நடவடிக்கையால் நடப்பு ஆண்டில் மழலையர் வகுப்புகளில் மாணவர்கள் சேர்க்கை கணிசமான அளவில் குறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Categories

Tech |