Categories
மாநில செய்திகள்

“மழலை குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவில் அலட்சியம் காட்டும் அரசு”… அதிர்ச்சி அளிக்கும் வீடியோ…!!!!!

உத்திர பிரதேசத்தில் அரசு பள்ளியில் மதிய உணவு பரிமாறப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அரசு பள்ளியில் மதிய உணவு பரிமாறப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து வெளியாகியிருக்கும் இந்த இரண்டு நிமிட வீடியோவில் தரையில் அமர்ந்தபடி பள்ளி குழந்தைகள் மதிய உணவு திட்டத்தில் சாதம் மற்றும் உப்பு சாப்பிடுவது பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அயோத்தியில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவாக  சாதத்துடன் உப்பு மட்டுமே வழங்கப்படுகிறது இந்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.  தொடக்கப் பள்ளியில் படித்து வரும் ஒரு மாணவரின் பெற்றோரால் படம் பிடிக்கப்பட்ட இந்த வீடியோ குழந்தைகள் தரையில் அமர்ந்து மதிய உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சாதம் மற்றும் உப்பை சாப்பிடுவதை காட்டுகிறது.

மேலும் இதற்கு ஆசிரியர்கள் பொறுப்பேற்க மறுக்கின்றார்கள் கிராம தலைவரும் இதற்கு பொறுப்பேற்கவில்லை. அப்படியானால் இதற்கு யார் பொறுப்பு என கேமராவில் ஒருவர் கேள்வி எழுப்புகின்றார். ஆனால் அந்த வீடியோ எடுத்தவரின் அல்லது பேசுபவரின் முகம் வீடியோவில் தெரியவில்லை இந்த குழந்தைகள் எல்லாம் சோறும் உப்பும் சாப்பிடுவதை பார்க்கலாம் அத்தகைய பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப யார் விரும்புவார்கள்? முதல்வர் யோகி ஆதித்தனார் இந்த வீடியோவை பார்க்க வேண்டும் என சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோவில் கூறப்படுகிறது. இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து அரசு தொடக்கப்பள்ளி முதல்வர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றுள்ளது.  இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்த அயோத்தி மாவட்ட உள்ளார் பள்ளியின் தலைமை ஆசிரியரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மதிய உணவின் போது மாணவர்கள் சாக்குப்பை ஒன்றின் மீது உட்கார வைக்கப்படுவதை பெற்றோர்கள் குற்றம் சாட்டியிருக்கின்றார்கள். பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டுதலின்படி அல்லது நிர்ணயிக்கப்பட்ட மெனுவின்படி மாணவர்களுக்கு மதிய உணவு கிடைப்பதில்லை எனவும்  பள்ளி தலைமை ஆசிரியர் பள்ளிக்கு எப்போதாவது தான் வருகிறார் எனவும் மாணவர்களின் பெற்றோர் குற்றம் சாட்டி வருகின்றார்கள்.

Categories

Tech |