Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மழைக்காக விடுமுறை கேட்ட பள்ளி மாணவன்…. ட்விட்டர் மூலம் பதில் அளித்த கலெக்டர்…. என்ன தெரியுமா…???

விருதுநகர் மாவட்டத்தில் மாலை மற்றும் இரவு நேரங்களில் தொடர்ந்து மழை பெய்கிறது. நேற்று முன்தினம் மாலை நேரத்தில் மழை பெய்ததால் பள்ளிக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய மாணவ மாணவிகள் சிரமப்பட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் புதுச்சேரியில் இருக்கும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அந்த மாநில அரசு விடுமுறை அறிவித்தது. இதனால் இரவு 10.10 மணிக்கு சிவகங்கை சேர்ந்த ஒரு மாணவர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டியின் ட்விட்டர் பக்கத்தில் சார் சிவகாசியில் மாலை முதல் மழை வந்த வண்ணம் உள்ளது. நாளை (நேற்று) பள்ளி கல்லூரிக்கு விடுமுறை கிடைக்குமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு மாவட்ட ஆட்சியர் இரவு 10:45 மணிக்கு பதில் அளித்துள்ளார். அதில் விடுமுறை கிடையாது என்பதை தெரிவித்து, மாலையில் மழையை ரசித்து, நாளை வழக்கம்போல் பள்ளிக்கு செல் என பதில் அளித்துள்ளார். இதனை பலர் சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

Categories

Tech |