மழைக்காலங்களில் துணிகளில் வீசும் நாற்றத்தை எப்படி போக்குவது என்பதைப் பற்றி இது தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.
மழைக்காலத்தில் வினிகர் மற்றும் பேக்கிங் சோடா போன்ற பொருட்களை நாம் பயன்படுத்தி எவ்வாறு ஆடைகளை துர்நாற்றம் வராமல் பராமரிக்கலாம் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். மழைக்காலம் ஆரம்பித்து விட்டால் ஆடைகளில் ஒருவகை பூஞ்சை நாற்றமடிக்கும். இந்த நாத்தம் எத்தனை தடவை துணிகளை வாஷிங் மெஷினில் போட்டு எடுத்தாலும் நீங்கவே நீங்காது. அதேபோல் அலமாரியில் நீண்டநாள் பயன்படுத்தாத ஆடைகளிலும் இந்த நாற்றம் ஏற்படும். எனவே மழைக்காலங்களில் ஆடைகளில் உள்ள பூஞ்சை நாற்றத்தை போக்க நாம் பேக்கிங் சோடா மற்றும் வினிகரை பயன்படுத்தலாம். இது உங்களுக்கு புதிய வாசனையைக் கொடுக்கும்.
பூஞ்சை நாற்றத்தை போக்க உதவி செய்யும். அலமாரியில் அடுக்கி வைத்துள்ள ஆடைகளை நீண்ட காலத்திற்கு பயன்படுத்தாமல் இருக்காதீர்கள். அப்படி நீங்கள் பயன்படுத்தாமல் வைத்திருந்தால் துர்நாற்றம் அடிக்கும். அந்த துர்நாற்றத்தை நீக்க சலவைப் பொருட்கள் பேக்கிங் சோடா மற்றும் வினிகரை பயன்படுத்துங்கள். ஆடைகளில் இருக்கும் பூஞ்சை தொற்று நீக்குவதற்கு வாசனை திரவியங்களை பயன்படுத்தாதீர்கள். அது சிறிது நேரத்திற்கு மட்டுமே பலனளிக்கும் தவிர முழுமையாக பூஞ்சை தொற்றை நீக்காது. துணிகளுக்கு புத்துணர்ச்சி உண்டாக வினிகர் மற்றும் பேக்கிங் சோடா இரண்டுமே பயன்படும் .இது துணிகளில் உள்ள துர்நாற்றத்தையும் போக்கும்.
வாஷிங்மெஷினில் வெதுவெதுப்பான நீர் மற்றும் வினிகரை கொண்டு அலசுங்கள். வாஷிங்மெஷினில் துணிகளை ஒரே இடத்தில் குவிக்காமல் சமமாக போட்டு ஒயிட் வினிகரை பயன்படுத்துங்கள். இதில் உள்ள அமிலத்தன்மை பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடி பூஞ்சை தொற்றை குறைத்துவிடும்.இதையடுத்து துணியை அலசும்போது பேக்கிங் சோடா பயன்படுத்தலாம். தண்ணீரில் இரண்டு ஸ்பூன் பேக்கிங் சோடாவை கலந்து அந்த நீரில் துணிகளை நன்கு விரித்து அலசி எடுங்கள். இதை குளிர்ந்த நீரில் இல்லாமல் வெதுவெதுப்பான நீரில் அலசினால் துணிகளில் மீதமுள்ள துர்நாற்றத்தை போக்க முடியும். சூரிய ஒளியில் துணிகளை உலர வைப்பது துணிகளில் உள்ள பாக்டீரியாக்களை போக்க உதவி செய்கிறது. வாஷிங்மெஷினில் துணிகளை காய வைத்து பயன்படுத்தலாம். ஆனால் நன்கு உலர்ந்த பிறகு ஆடைகளை மடித்து வைத்தால் துர்நாற்றம் வீசாமல் இருக்கும்.