Categories
மாநில செய்திகள்

மழைக்காலத்திலும் முகக்கவசம் கட்டாயம்…. சுகாதாரத்துறை அமைச்சர் கூறிய தகவல்….!!

சென்னையில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சைதாப்பேட்டை தொகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சுகாதார துறை அமைச்சர் சுப்பிரமணியம் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன்பிறகு கோட்டூர் சிப்ஸி காலனியில் கன மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக முதல்வர் ஸ்டாலின் அனைத்து துறைகளிலும் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

அந்த கூட்டத்தில், குடிநீர்-கழிவு நீரகற்றும் துறை, மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மின்சார துறைகள் ஆகிய துறைகள் என்னென்ன பணிகளை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார். அதன்படி குடிநீர், கழிவுநீர் அகற்று வாரியத்தின் சார்பில் தாழ்வான பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்து, அவர்களுக்கு 3 வேளை உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் அவர்களுக்கு மாநகராட்சி மற்றும் மருத்துவத் துறை இணைந்து மருத்துவ முகாம்கள் அமைத்து சிகிச்சை அளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதனைத் தொடர்ந்து பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பல்வேறு இடங்களில் மின் இணைப்பு தர முடியாத நிலையில் இருந்துகொண்டு வருகிறது. பெரிய அளவிலான பாதிப்புகளை தவிர்ப்பதற்காக தண்ணீர் தேங்கி உள்ள இடங்களில் துடிப்பு செய்து இருக்கிறார்கள். எனவே பொதுமக்களுக்கு இடையூறு என்றாலும் தண்ணீர் வடிந்த பிறகு தான் மின் இணைப்பு தர இயலும். எனவே இந்த சிரமங்களை பொதுமக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு சென்று இருப்பவர்கள் இரண்டு நாட்களுக்கு சென்னை திரும்பாமல் இருப்பது பாதுகாப்பானது, போக்குவரத்து நெரிசல் மற்றும் மழைநீரில் சிக்கிக் கொள்வதை தவிர்க்கலாம். ஆனால் முகக்கவசம் என்பது கண்டிப்பாக தொடர்ந்து அணிய வேண்டும். மழைக்காலத்தில் முகக்கவசம் அணிந்து கொரோனா பரவலை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

Categories

Tech |